காஷ்மீர் மாநிலத்தில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்குள்ள சோபியான் மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிர் இழந்ததுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அங்குள்ள கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாநில போலீசாரும், அசாம் ஆயுதப் படையினரும் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள், அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு, சரண் அடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் சரண் அடைய மறுத்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் பதிலடி தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர், அந்த வீட்டை குண்டுவீசி தகர்த்தனர். இதில் 2 தீவிரவாதிகள் உயிர் இழந்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் கிடந்த தீவிரவாதிகளின் உடல்களை மீட்க முயன்றனர். அப்போது ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினான்.
இதில் ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் (வயது 32) படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.
இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான வரதராஜன், கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில் மனைவி கீதாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் ஒரே மகன் முகுந்த். ராணுவ மேஜரான முகுந்திற்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் இந்து. இவர்களுக்கு 3 வயதில் அர்ஷிதா என்ற மகள் இருக்கிறாள். பெங்களூரில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட மேஜர் முகுந்தின் உடல், நேற்றிரவு சுமார் 12 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.
மூவர்ணக் கொடியால் மூடப்பட்ட சவப்பெட்டியில் வந்து சேர்ந்த முகுந்த் வரதராஜனின் உடலை கண்டதும் அவரது உறவினர்கள் சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர்.
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகளின் அஞ்சலி செலுத்தி வருகின்றனனர். சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் ராணுவ மரியாதையுடன் முகுந்த் வரதராஜனின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக