சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மதிப்புமிகு. வே.இராஜாராமன் I.A.S. அவர்களுடன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி ஆணையினை இன்று (22.4.2014) அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களில் பெரும்பாலோர் பெண் ஆசிரியர்கள் என்பதால் முன் கூட்டியே பணிபுரியும் இடம் தெரிந்தால் செல்வதற்கு எளிதாக இருக்கும் என எடுத்து கூறப்பட்டது. திருப்புவனத்திற்கு பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து பிரச்சணை பற்றியும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எடுத்துக் கூறப்பட்டது. நம் கோரிக்கைகளை கவனத்துடன் உள்வாங்கி கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேர்தல் பணிக்கான ஆணையினை மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின் படி நாளை(23.4.2014) தேர்தல் பயிற்சி வகுப்பில்தான் அளிக்க இயலும் என்பதை தெளிவாக்கினார். மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீற இயலாது என்பதை நம்மிடம் தெளிவு படுத்தினார்கள். ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சணைகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆட்சியர் நாளை(23.4.2014) காலை 9.00 மணிக்கு பூவந்தியிலிருந்து திருப்புவனத்திற்கு பேருந்து வசதியினை ஏற்படுத்தி தர உடனடியாக உத்தரவிடுவதாக உறுதியளித்தார். எனவே ஆசிரியர்கள் இந்த பேருந்து வசதியினை பயன்படுத்திகொள்ளுமாறு இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இயக்கத்தின் முயற்சிக்கு மதிப்பளித்து பேருந்து வசதியினை ஏற்படுத்தி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இயக்க வேண்டுகோளுக்கிணங்க தேர்தல் பணியில் ஈடுபட இயலாத ஆசிரியர்களுக்கு பணியினை மாற்றம் செய்ய உதவிய கோட்டாட்சியர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். வாக்களிப்போம்!!! வளமான , வலிமையான ஜனநாயகத்தை கட்டமைப்போம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக