தேர்தல் நாளில் வாக்குச்சாவடி சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சம்பந்தப்பட்ட அறைகளை சுத்தம் செய்து அதற்கான சாவிகளை குறிபிட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் ஒப்படைத்து விட்டனர். எஸ்.புதூர் ஒன்றியத்தில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் வாக்குச்சாவடி அறையின் சாவியை தனியாக எடுத்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்து விட்டார். மற்றொரு அறையில் பள்ளி பதிவேடுகள் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற முக்கியமான தளவாடங்களை வைத்து பூட்டி அதன் சாவியை தான் எடுத்து வந்து விட்டார். தேர்தல் முதல் நாள் இரவு அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற வருவாய் ஆய்வாளார் தளவாடங்கள் இருந்த அறை பூட்டப்பட்டுள்ளதை அறிந்து அப்பள்ளியின் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு எப்படி அறையை பூட்டுவாய் என்று ஏக வசனத்தில் பேசியுள்ளார். தேர்தல் பணிக்காக மாற்று ஒன்றியத்திற்கு சென்றுள்ள தலைமையாசிரியரின் எவ்வித விளக்கத்தையும் காது கொடுத்து கேளாமல் நான் நினைத்தால் உன் வேலையையே போக்கி விடுவேன். தேர்தல் ஆணையத்தின் பவர் தெரியுமா? உனக்கு என்று வசைமாறி பொழிந்துள்ளார். பள்ளியின் முக்கிய தளவாடங்கள் இருக்கும் அறையை இவரிடம் ஒப்படைக்க சொல்லி யார் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் ஆசிரியர்கள் தேசிய பணியாற்றினால் வருவாய் துறையின் அடிமைகளாக வலம் வர வேண்டும் என எழுதப்படாத சட்டமா?. விசயம் அறிந்த நாம் உடனடியாக வட்டார TNPTF நிர்வாகிகளுடன் இணைந்து நடந்த விசயங்களை முழுமையாக எழுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழி காட்டியுள்ளோம். தேர்தல் சமயத்தில் நடந்த விசயங்கள் மற்றும் சிவகங்கையில் வருவாய் அலுவலரின் வரம்பு மீறிய பேச்சு, காரைக்குடி வருவாய் அலுவலர்களின் மெத்தனப் போக்கால் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வாக்களிக்க(EDC) இயலாமை, எஸ்.புதூர் ஒன்றியத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளரின் வாய் கொழுப்பெடுத்த பேச்சு, தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சணைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே சில விசயங்கள் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு தொலைபேசி வழியாக நாம் உணர்த்தியுள்ள போதும் TNPTF மாவட்ட நிர்வாகிகள் ஆட்சியரை நேரடியாக சந்திந்து இது குறித்து விரிவாக விவாதிக்க உள்ளனர். ஆசிரியர்கள் பிரச்சணையில் இயக்கம் எப்பொழுதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள தயங்கியதில்லை. சிவகங்கையில் ரிசர்வில் வைக்கப்பட்ட ஆசிரியர்களை பார்த்து தண்டச்சம்பளம் என கூறிய வருவாய் அலுவலரை கண்டித்து மிகப்பெரிய முற்றுகை போராட்டத்தை நாம் தேர்தல் நாள் அன்று நடத்தினோம். தேர்தல் முதல் நாள் அன்று ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் வலியுறுத்தினோம். EDC விசயமாக வருவாய் அலுவலர்களின் மெத்தனத்தை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு EDC கிடைக்க ஏற்பாடு செய்தோம். தற்பொழுது ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் பிரச்சணைகளை மையப்படுத்தி இயக்க நடவடிக்கைக்கு TNPTF தயாராகி வருகிறது. ஆசிரயர்களுக்கு அடங்காத சமுதாயம் அகிலத்தை ஆள முடியாது என்பது தெரிந்தும் ஆசிரியர்களை அடக்க நினைக்கும் அதிகார வர்க்கத்தினை ஒருங்கினைந்து எதிர்ப்போம். ஒற்றுமையை வளர்ப்பபோம். இது ஒரு சமரசமற்ற இயக்கம் என்பதை உணர்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக