சிவகங்கை,: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு
மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு
உறுப்பினர்கள் தேவராஜசேகரன், ஜான்கென்னடி முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை
விளக்கி மாவட்ட செயலாளர் ஜோசப்ரோஸ், மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன்
பேசினர். தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ வாழ்த்தி
பேசினார். வட்டார செயலாளர் குமரேசன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர் கலந்து
கொண்டனர்.
பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப
வேண்டும், சேம நலநிதி கணக்கை முடித்து உடனடியாக கணக்கு சீட்டு வழங்க
வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்
வலியுறுத்தப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக