தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இணையதளத்தில் கொண்டு வரும் பணிக்கான சிறப்புப் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியுள்ளது. www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சுமார் 57 ஆயிரம் பள்ளிகள், ஐந்தரை லட்சம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த தகவல்கள் இடம் பெற உள்ளன. இந்த இணையதளத்தை பராமரிப்பதற்காக, கல்வித்துறை அதிகாரிகளைக் கொண்ட 45 பேர் அடங்கிய குழுவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பயிற்சி அளிக்க உள்ளது.
எழும்பூரில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்ககத்தில் பயிற்சி முகாமை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் பாடக் குறிப்புகள், அரசு வழங்கும் உதவித் திட்டங்கள் குறித்த தகவல்கள் என பள்ளிக் கல்வித்துறை சார்பான அனைத்து தகவல்களும் இதில் தொகுக்கப்பட உள்ளன.
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக