மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது. இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது. ஜூன் மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகே அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்பது துல்லியமாக தெரிய வரும்.
இதன்பிறகு அகவிலைப்படி உயர்வு பற்றிய நடைமுறைகள் தொடங்கும்.
ஆகஸ்ட் இரண்டாம் வாரம் அகவிலைப்படி உயர்வு பற்றிய பரிந்துரைகள் மத்திய அமைச்சரவை குழுவிற்கு அனுப்பப் படும்.
மத்திய காபினெட் இதுபற்றி முடிவு செய்து, செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிடும்.
இதன் பிறகு அரசாணை வெளியிடப்படும்.
மத்திய அரசின் அரசாணையை பின்பற்றி மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும்.
மாநில அரசுகள் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிபார்க்கப் படுகிறது.
மாநில அரசு ஊழியர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் 3 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை பெறுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 7% அல்லது 8% ஆக இருக்கலாம் என கணிக்கப் பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக