நாம் எதை செய்தாலும் அதை விமர்சிக்க வேண்டும் என்ற மனோபாவம் சில சகோதர இயக்கங்களிடம் இயல்பாகவே வேரூன்றிவிட்டது. தமிழகத்தில் நடைபெற்று வருகிற மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களின் நலன் கருதி நாம் வெளியிட்ட சிவகங்கை மாவட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விபரத்தினை சில நண்பர்கள் விமர்சித்து வருகிறார்கள். நாம் விபரம் வெளியட்ட உடனே நாம் செய்ய நினைக்காத செயலை இவர்கள் எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று பொறுமியிருக்கிறார்கள். நாம் இந்த பட்டியலை வெளியிட அனைத்து வட்டாரச் செயலாளர்களிடம் இருந்து விபரம் பெறப்பட்டு அதை மறு உறுதி செய்து வெளியிடுகிறோம். இதை மற்ற இயக்கங்களும் தாராளமாக செய்யலாம். அப்படி செய்யாமல் நம் மீது அவதூறு பரப்புவது என்பது ஏற்புடையதல்ல. கடந்த ஆசிரியர் நியமனத்தின் பொழுது சிவகங்கை மாவட்டத்தில் பெறுப்பேற்ற சுமார் 450க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளிக்கு எளிதாக செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மற்றும் வட்டாரப் பொறுப்பாளர்களின் அலைபேசி எண் அடங்கிய விபரக்குறிப்பினை வெளியிட்டோம். அதைக்கூட விமர்சித்தவர்கள்தான் இப்போதும் கூப்பாடு போடுகிறார்கள். ஒவ்வொரு கலந்தாய்விலும் இயக்கத்தை எந்த அளவிற்கு வளர்த்தோம் என்பது அல்ல எங்கள் நோக்கம். இயக்கத்தால் இந்த ஆசிரியர் சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்பதே நம் நோக்கம். நாம் வெளியட்ட பட்டியல் தமிழகம் முழுமையும் அனைத்து ஆசிரியர்களின் பாராட்டுதலை பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை. நம்மை மற்றவர்கள் விமர்சிக்கும் பொழுதுதான் நாம் முன்பை விட சிறப்பாக செயல்பட முடிகிறது. சகோதரர்களே எங்களை முதுகில் குத்தாதீர்கள். முதுகில் குத்தினால் மூன்றடி மட்டுமே முன்னேற முடிகிறது. நெஞ்சில் குத்துங்கள் அப்பொழுதுதான் 10 அடி மேலே எழும்ப முடியும். நாங்கள் உயர பறப்பதையே விரும்புகிறோம். மற்றவர்கள் செய்ய நினைக்காத, செய்ய மறந்த, மறுத்த ஆசிரியர் நலன் காக்கும் செயல்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து செய்யும்
“போற்றுவார் போற்றட்டும்,
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்,
ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன்.
எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்”
“போற்றுவார் போற்றட்டும்,
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்,
ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன்.
எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக