கோவை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி மாறுதல் கலந்தாய்வில், ஒருவருக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டது.
அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2014-15 கல்வி ஆண்டுக்கான பதவி உயர்வு, பணிநிரவல் மற்றும் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு ராஜவீதியிலுள்ள, துணி வணிகர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாற்றம் குறித்த, ஆன்-லைன் கலந்தாய்வு நடந்தது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, 23 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 4 ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 1 ஆசிரியர் சிவகங்கை மாவட்டத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். மற்ற, 18 ஆசிரியர்கள் பணிமாறுதலில் விருப்பமில்லை என தெரிவித்தனர். பணி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியருக்கு, சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஆன்-லைனில் பணிநியமன ஆணையை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக