சென்னை: ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதால் பி.இ. கவுன்சிலிங்கோ, மாணவர் சேர்க்கையோ எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.
அவர் கூறுகையில், ஐந்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து முன்பு இருந்தது போல சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பி.இ. கலந்தாய்வு பாதிக்கப்படாது.
மேலும் 4 இடங்களில் கவுன்சிலிங் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை அரசு நடைமுறைப்படுத்தினால் அதன்படி பி.இ. கவுன்சிலிங்கை 4 இடங்களில் நடத்தத் தயாராகவுள்ளோம். இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக