1
நாளை டில்லியில் நடைபெறவுள்ள லோக்பால் வரைவுக்குழு கூட்டத்தை குழுவின் மக்கள் பிரிவு உறுப்பினர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். டில்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 8ம் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்தார்.
இன்று பாபா ராம்தேவுக்கு எதிரான டெல்லி போலீஸ் நடவடிக்கையை கண்டித்து இந்த புறக்கணிப்பு முடிவை எடுக்கப்பட்டதாக லோக்பால் உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனத்தை கண்டித்து ஜூன் 8ம் தேதி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார். லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசு உண்மையில் அக்கறை காட்டவில்லை என்று கூறினார். மேலும் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் லோக்பால் மசோதா வரம்பிற்குள் வரவேண்டும் என்றும் தெரிவித்தார். .