கல்விக் கட்டணம் காசோலை அல்லது வரைவோலை மூலம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சி இன்று நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் கோவையில் மாநில செயற்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
புதிய கல்விக் கட்டணம் குறித்த விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் உடன் அறிவிக்காததால் பள்ளி நிர்வாகங்கள் ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் விருப்பத்திற்கு கட்டணத்தை வசூல் செய்துள்ளனர். மேலும், சீருடைகள், நோட்டுப் புத்தக கட்டணத்தை பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று தடையற்ற கொள்ளைக்கு வாய்ப்பு அளித்துள்ளது மக்களை மிக மோசமாக பாதிக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக