நெல்லை: சமச்சீர் கல்வி பாடபுத்தகத்தில் பாடங்களை கிழிக்கவும், மையிட்டு அழிக்கவும் கத்திரிக்கோல், ஸ்டீல் கேல், பிளேடு, கருப்பர் மர்க்கர் பேனாவுடன் இன்று ஆஜராகவும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிழிக்கும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் தொடரலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் பாட திட்டத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு அமைத்தது.
இக்குழு உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பிக்கும்.
இதற்கிடையே 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்காக அச்சிடப்பட்டுள்ள சமச்சீர் கல்வி, தமிழ், அறிவியல், சமூக அறிவியல், பாடபுத்தகங்களில் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், கருணாநிதி, கனிமொழி உள்ளிட்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
இவற்றைக் கிழிக்கவும், சிலவற்றை கருப்பு மையால் அழிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாடு லோகோவை பச்சை நிற ஸ்டிக்கரால் மறைக்கவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பச்சை நிற ஸ்டிக்கர்களை தேவையான அளவு பள்ளி கல்விதுறையே ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் பக்கங்களை கிழிப்பதற்கு தேவையான பிளேடு, கத்தரிக்கோல், பாடங்களை மறைக்க கருப்பு நிற மார்க்கர் பேனா, ஸ்டீல் ஸ்கேல் ஆகிய பொருட்களை ஆசிரியர்களே கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கிழிப்பு பணியை கடுப்புடன் தொடங்கியுள்ளனர் ஆசிரியர்கள்!
"புத்தகங்களை கிழிக்கக் கூப்பிடும் அரசு, அதற்குத் தேவையான பிளேடு, கத்திரி, கட்டர் போன்றவற்றைக் கூட கொடுக்காமல், எங்கள் செலவில் வாங்கி வரச் சொல்வது"தான் இவர்கள் கடுப்புக்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக