தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவிடுமுறை கூடுதலாக 15 நாட்கள் விடப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து இன்னும் ஒருவார காலம் நிறைவடைவதற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவி, ஒரு மாணவர் என 2 பேரும், சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜீவானந்தம் (15) என்ற மாணவர், பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கல்வி அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. பெற்றோர் மத்தியில் இந்த சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக