சென்னை: ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாயை விட, குறைந்த சம்பளம் பெறுவோருக்கு, வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, சென்னை முதன்மை வருமான வரி ஆணையர் பிரேமா மாலினிவாசன் தெரிவித்துள்ளார்.
இன்று நிருபர்களை சந்தித்த பிரேமா மாலினிவாசன் கூறியதாவது:
"ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாயை விட, குறைந்த சம்பளம் பெறுவோருக்கு, வருமான வரி செலுத்த தேவையில்லை. வருமான வரி படிவமும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. 2010- 11 ம் முதல் அமலாக்கப்பட்டுள்ள இந்த வரி விலக்கு மாத சம்பள தாரருக்கு மட்டுமே பொருந்தும்.
ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறுவோர், சம்பளத்தை தவிர வேறு வருமானம் பெறுவோர், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு சம்பளதாரருக்கும், சகஜ் என்ற பெயரிலான, சிவப்பு நிறத்தலான சிறிய வருமான வரி படிவம் அளிக்கப்படும். இந்த படிவத்தை முழுமையாக படித்து, படிவத்தில் எழுதுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் (பாக்ஸ்) மட்டுமே எழுத வேண்டும். மற்ற இடங்களில் எழுத கூடாது. சகஜ் படிவத்துடன் மற்ற எந்த ஆவணத்தையும் இணைக்க வேண்டியதில்லை.
வருமான வரி செலுத்துபவர்கள், வரும் 28-ந் தேதி முதல் 31-ந்தேதிக்குள், சென்னை உத்தமர்காந்தி சாலையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் செலுத்தலாம். ஊனமுற்றவர்கள், மூத்த குடிமக்களுக்கு தனி கவுண்டர்கள் உட்பட, இதற்காக 40 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்படுகின்றன. 15 உதவி மையங்கள் அமைக்கப்படுகிறது. காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்.
மேலும், சனி, ஞாயிறுக்கிழமைகளில், சிறப்பு கவுண்டர்கள் செயல்படும். “பான் கார்டு” நம்பரை சரி பார்க்க தனி மையமும், வரி கட்டாமல் விடுபட்டவர்கள் பணம் செலுத்த பாங்கி கவுண்டர்கள் மற்றும் இலவச போன் வசதி, கேன்டீன் வசதியும் செய்யப்பட்டுள்ளது".
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக