சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள புதிய காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாக வேண்டுமானால் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72,000க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்பட்டு,
அதிமுக அரசு புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த புதிய ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்துக்கான இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர்களை சமர்பிக்க விரும்பும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட காப்பீட்டுதாரர்களை வைத்துள்ள நிறுவனம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற நிறுவனங்களுடன் கூட்டணி இல்லாமல் தனித்தே செயல்படும் தகுதியை இன்சூரன்ஸ் நிறுவனம் பெற்றிருக்க வேண்டும்.
புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் மேற்பார்வையிடும். பயனாளிகளுக்கான முழு காப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு அரசே அளிக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளியாக வேண்டுமானால் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72,000 ஆக இருக்க வேண்டும். இதற்கான வருமான சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்க வேண்டும்.
காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகளின் குடும்பத்துக்கு தனியாக அடையாள அட்டைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத் தின் மூலமாகவோ வழங்கப்படும்.
காப்பீட்டு திட்டத்துக்கான அனுமதியை பெறும் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய முறையில் பயனாளிகளுக்கு சேவையை அளித்திட வேண்டும். ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
காப்பீட்டு திட்டத்தில் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம்.
செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக