சிவகங்கை, ஜூலை 21: அரசுப் பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பல் பரிசோதனை முகாம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறவுள்ளது. பல்லில் சேரும் கிருமி காரணமாக சொத்தை ஏற்படுகிறது. சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால், பல் சேதமடைவதைத் தவிர்க்கலாம். எனவே, பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு பல் பரிசோதனை முகாம்கள் ஆகஸ்ட் மாதவாக்கில் தொடங்கவுள்ளன. இதுகுறித்து மருத்துவத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல் பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில், சுகாதாரத் துறை இணை இயக்குநர், துணை இயக்குநர், மாவட்ட கல்வி அதிகாரிகள், உள்ளூரில் உள்ள பல் சுகாதார சங்கங்கள் ஆகியவை இணைந்து இந்த முகாம்களை நடத்த உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற டாக்டர்கள் இப் பணிக்காக தாற்காலிகமாக அமர்த்தப்படுவர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக