பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/23/2011

அச்சகங்களில் பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்க இடம் இல்லை : பள்ளிகளுக்கு கொண்டு செல்ல தடை

விருதுநகர் : தமிழகத்தில் பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. ஜூலை 26 ல் விசாரணை நடக்க உள்ள நிலையில், பழையபாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. சமச்சீர் பாடப்புத்தகங்கள் 95 சதவீதம், பழைய பாட புத்தகங்கள் 85 சதவீதம் அச்சிடப்பட்டுள்ளன. இதன் பணிகள் நிறைவு பெறும் நிலையில், அரசு கிடங்கில் புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது தவிர அந்தந்த கல்வி மாவட்டங்களில் தலா ஒரு பள்ளியில் ஸ்டாக் பாய்ன்டும் உள்ளன. அச்சகங்களில் இடப்பற்றாக்குறையால் அரசு கிடங்கு, ஸ்டாக் பாய்ன்ட் பள்ளிகளில் இறக்கப்பட்டு வந்தன. இதனிடையே, ஸ்டாக் பாய்ன்ட் பள்ளிகள், அரசு புத்தக கிடங்குக்கு , ஜூலை 26 வரை புத்தகங்களை அனுப்புவதை நிறுத்த தமிழ்நாடு பாட நூல் கழக நிறுவன அதிகாரிகள் அச்சகங்களுக்கு வாய் மொழி உத்தரவிட்டுள்ளனர். இதனால் புத்தகங்களை வைக்க இடமில்லாமல் அச்சகங்கள் திணறி வருகின்றன . பல அச்சகங்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஸ்டாக் பாயின்ட் பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றன. பள்ளிகளிலோ புத்தகங்களை இறக்க தலைமையாசிரியர்கள் தயங்கி வருகின்றனர்.

Dinamalar - No 1 Tamil News Paper

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக