திண்டுக்கல் மாவட்டத்தில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் கூறியதாவது: "அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் சார்பில் அரசுப் பள்ளிகளில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்காக, மேலாண்மை குழு மூலம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500
வழங்கப்படும். கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வாங்க ரூ.350 அளிக்கப்படும்.
இவர்கள், தினமும் தலா இரண்டு மணி நேரம் காலை, மாலை இரு வேளைகளிலும்
பயிற்சி அளிப்பர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 155 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள கோ.ராமநாதபுரம், அணைப்பட்டி கள்ளர் பள்ளி, நத்தம் மகளிர் பள்ளி, நத்தம் கோவில்பட்டி ஆண்கள் பள்ளி, கோபால்பட்டி, திண்டுக்கல் மகளிர் பள்ளி, வேடசந்தூர் மகளிர் பள்ளி, பழநி மகளிர் பள்ளி ஆகிய 8 இடங்களில் கூடுதலாக தலா ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக