சேலம் : பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரியாணி விருந்துடன் பட்டுச்சேலை அன்பளிப்பு வழங்குவதாக ஆசிரியர் சங்கங்கள் புகார் கூறுகின்றன. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 2 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்(ஏ.இ.ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் செயல்பாடு, கம்பி பந்தலில் குழந்தைகளின் படைப்புகள் தொங்கவிடப்பட்டுள்ள விவரம்,
ஆசிரியர்களின் பாடக்குறிப்பு, அவர்களின் வருகை நேரம், குழந்தைகளின் வாசிப்புத்திறன், மனப்பாடம் செய்யும் திறன், பள்ளி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து உயரதிகாரிகளிடம் அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால், 90 சதவீத ஏ.இ.ஓ.க்கள் முறையாக கண்காணிப்பது இல்லை என ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பள்ளிகளில் குறைபாடு உள்ளதாக ஏ.இ.ஓ.,க்கள் பதிவேட்டில் குறிப்பிட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல் வரும் என்பதால், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளை கவனித்து அனுப்புவதிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஏ.இ.ஓ.,க்கள், பள்ளிகளில் ஆய்வுக்குச் சென்றால், அவர்களுக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் கட்டாயமாக பிரியாணியுடன், அசைவ விருந்து கொடுக்கின்றனர். ஸி500 முதல் ஸி1000 வரை அன்பளிப்பும் தருவது உண்டு. பெண் அதிகாரியாக இருந்தால் அசைவ விருந்துடன், பட்டுச்சேலையும் தருகின்றனர். இவ்வாறு செய்வதால் பள்ளிக்கல்வித் தரம் திட்டமிட்டு முடக்கப்படுகிறது’’ என்கின்றனர்.
புகார் குறித்து ஏ.இ.ஓ.,க்களிடம் கேட்டபோது, ஏ.இ.ஓ.,க்கள் பள்ளி ஆய்வுக்குச் செல்லும்போது, அசைவ விருந்து அளிப்பது உண்மைதான். இதையெல்லாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது. மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, வேலை செய்தாலே இதுபோன்ற தவறுகள் குறைந்து விடும் என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக