நெல்லை : ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்கி முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், 26-ம் தேதி வரை
காத்திருக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து திருத்த சட்டத்தை அதிமுக அரசு
கொண்டு வந்தது. சமச்சீர் கல்வி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் விசாரித்து, இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் அரசு அப்பீல் செய்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், 9 பேர் குழு அமைத்து ஆய்வு நடத்தி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை ஏற்கும்படி இல்லை என்று கூறிய ஐகோர்ட் நீதிபதிகள், சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும் 22-ம் தேதிக்குள் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பவும் உத்தரவிட்டனர். அதிமுக அரசு கொண்டு வந்த திருத்த சட்டம் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. குழப்பம் இப்போதாவது ஓய்ந்ததே என்று மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில், ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அரசு அப்பீல் செய்தது. நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக் வர்மா முன்பு இந்த வழக்கு
நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. ‘‘முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் தவறான
பாடங்களை நீக்கவும் ஐகோர்ட் அனுமதி அளித்து தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது. அதை செய்ய அரசு ஏன் தயங்குகிறது?’’ என்று கேள்வி எழுப்பிய
நீதிபதிகள், ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்க உத்தரவிட்டனர். இறுதிக்கட்ட விசாரணை 26-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சமச்சீர் புத்தகங்களை வழங்க 10 நாள் அவகாசம்
மட்டுமே உள்ளது. ஆனாலும், சமச்சீர் புத்தகங்களை வழங்க 26-ம் தேதி வரை காத்திருக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் வாய்மொழி உத்தரவு இன்று காலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், புத்தக வினியோகம் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள்
தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர். இது பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர்கள் மத்தியில் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக