சென்னை:ஆசிரியர் பணி நியமனக் கொள்கை குறித்து, பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் வெளியாகாததால், ஆசிரியர் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், புதிய ஆசிரியர் பணி நியமனங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், இந்த பட்ஜெட்டில் அது குறித்த தகவல்களும் இடம்பெறவில்லை.தமிழக அரசு, 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. வழக்கமாக, பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகை விவரங்கள் வெளியிடப்படும். ஆனால், இந்த பட்ஜெட்டில், ஒவ்வொரு துறையிலும் புதிதாக அமல்படுத்தப்படும் திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து மட்டும் விளக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்படவில்லை.பள்ளிக் கல்வித் துறைக்கு, 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில், 10 ஆயிரத்து 147 கோடியே 56 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டில், மொத்தம் எத்தனை கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. பள்ளி இடைநிற்றலைத் தடுப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு விவரம் மட்டும் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வகையில், மொத்தம் 1,128 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அது குறித்த சரியான புள்ளி விவரங்கள் இன்னும் துறைக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பிறகே, நிதி ஒதுக்கீடு குறித்த விவரம் தெரியும்' என்றனர்.
ஆசிரியர் பணி நியமனக் கொள்கை குறித்தும், புதிய ஆசிரியர் பணி நியமனம் குறித்தும், ஆசிரியர் பணிக்கு படித்தவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த இரண்டு அம்சங்கள் குறித்து எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை. இதனால், ஆசிரியர் வேலைக்கு படித்தவர்களிடையே பெரும் ஏமாற்றமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், இடைநிலை ஆசிரியர்களைத் தவிர, மற்ற அனைத்து வகையான ஆசிரியர்களும் போட்டித் தேர்வு மூலமே நியமிக்கப்பட்டனர். ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியில், அனைத்து ஆசிரியர்களும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தற்போது, எந்த முறையில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும் என்று தெரியாத நிலை இருக்கிறது.அதேபோல், ஒவ்வொரு கல்வியாண்டிலும் காலியாகும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகும். இந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "பட்ஜெட்டில் அறிவிப்பு வராவிட்டாலும், பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, பணி நியமனக் கொள்கை மற்றும் புதிய ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக