கம்பம்: மூன்று மாவட்டங்களுக்குள் மட்டுமே இடம் மாறுதல் பெற முடியும் என்பதால், கள்ளர் சீரமைப்பு துறையில் பணியாற்றும் 500 ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, எங்கு வேண்டுமானாலும் இடம் மாறுதல் பெறலாம்.இதனால் சொந்த ஊர்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. கள்ளர் சீரமைப்பு துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு இல்லை. கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள், அரசு பள்ளிகளுக்கோ, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கோ இடம் மாறுதல் பெற முடியாது என்ற விதி உள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டுமே இத்துறை பள்ளிகள் இருப்பதால், இந்த மூன்று மாவட்டங்களுக்குள் மட்டுமே இவர்கள் இடம் மாறுதல் பெற முடியும். அதே நேரம் பணி நியமனம் செய்யும்போது மட்டும், பிற மாவட்டங்களில் இருந்தும் நியமனம் செய்கின்றனர். கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளில் தற்போது திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், சேலம், தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் பெற முடியாமல் புலம்பி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக