சென்னை: சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கத் தயாராக இருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படு்தத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களும், ஆசிரியர்களும் தெளிவடைந்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு உடனே அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதையடுத்து சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோக்கிக்கும் பணியைத் துவங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி கேட்டதற்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது,
சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அவற்றை ஏற்கனவே அந்தந்த மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் நிறுவன நிர்வாக இயக்குனரை சந்தித்து பேசவிருக்கிறேன். இன்னும் 10 நாட்களுக்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே புத்தகங்களை வினியோகித்துவிடுவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக