சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும். இன்னும் 10 நாட்களில் இத்திட்டத்தை அமல்படுத்தி புத்தகங்களையும் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் நிலை குறித்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில் இன்று சட்டசபையில் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வாசித்தார் முதல்வர் ஜெயலலிதா.
அப்போது அவர் கூறுகையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே தமிழகத்தில் அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தமிழக அரசு ஏற்கிறது. அதன்படி நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக