இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909
சமச்சீர் புத்தகங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது: தமிழக அரசு உறுதி
புது தில்லி, ஆக. 2: புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாட புத்தகங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.சமச்சீர் கல்வி தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எல். சௌஹான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, சமச்சீர் கல்விக்கு ஆதரவு தெரிவித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பில் வழக்கரைஞர்கள் ஆஜராகி வாதாடினர்.மூத்த வழக்குரைஞர் அந்தியர்ஜுனா: 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சட்டம் ரத்து செய்யப்படுவதாக தற்போதைய அரசு அறிவித்துள்ளது.அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததால், சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படாமல் உள்ளது.இதன் காரணமாக மாணவர்களுக்கு இரண்டு மாதங்களாக புத்தகங்கள் கிடைக்கவில்லை. இது தனி மனிதனின் உரிமையைப் பறிக்கக் கூடிய விவகாரம்.எந்த ஒரு சட்டமும் தனி மனித உரிமையைப் பறித்தால், அது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும் செல்லுபடி ஆகாததும் ஆகும். அப்படி இருக்கும் சூழ்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டமும், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்விச் சட்டமும் சட்டப்படி செல்லுபடி ஆகாது. இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.வழக்குரைஞர் கிருஷ்ணமணி: அச்சடிக்கப்பட்டுள்ள தமிழ், கணக்குப் புத்தகங்களில் எந்தவித பிரச்னையும் இல்லை என்று நிபுணர் குழு கூறியுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் தமிழக அரசு இந்தப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்யவில்லை? இது தொடர்பாக 6 - ம் வகுப்பு புத்தகத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்து பின் பக்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையையும், திருக்குறளையும் மறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.வழக்குரைஞர் விடுதலை: சமச்சீர் கல்வி முறையை 2011 ஆம் ஆண்டு அமல்படுத்துவதற்கு ஏதுவாக நிபுணர் குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை மறுபரிசீலனை செய்ய அரசாணை பிறப்பித்து. குழுவின் பிரிந்துரைகளை மறைத்து சமச்சீர் கல்வி முறை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சமச்சீர் புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.அப்போது குறிக்கிட்டு பேசிய, தமிழக அரசு வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன், இனிமேல் புதிதாக புத்தகங்களை அச்சடிக்க கீழ் நீதிமன்றம் எந்தவித தடையும் பிறப்பிக்கவில்லை ; சமச்சீர் புத்தகங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று நீதிபதிகளிடம் உறுதியளித்தார். இதை தொடர்ந்து வழக்குரைஞர் பசவ பப்பு பாட்டீல், குரு மெஹதா ஆகியோர் வாதாடினர். புதன்கிழமையும் விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது.இதில் மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் வாதாடவுள்ளார். அதன் பின்னர் எதிர்தரப்பு வாதங்களுக்கு தமிழக அரசு வழக்குரைஞர்கள் பதிலளிப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக