நெல்லை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வரும் 5-ம் தேதி நெல்லை, தூத்துக்குடி வருகிறார். அங்கு பள்ளி மாணவ, மாணவியரை சந்தித்து உரையாடுகிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பள்ளி மாணவ, மாணவியரை சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இளம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கின்ற தலைவர் அப்துல் கலாம் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் அவர் வரும் 5-ம் தேதி நெல்லை, தூத்துக்குடி வருகிறார். அவர் விருதுநகர் வந்து அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பள்ளியில் அரசு, தனியார், அரசு உதவி பெரும் பள்ளிகளைச் சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் 500 மாணவ, மாணவியரை சந்தித்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடக்கிறது.
பின்பு அங்கிருந்து கார் மூலம் பாளை பெல் மெட்ரிக் பள்ளிக்கு வருகிறார். அங்கும் பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுகிறார். பின்பு கோவில்பட்டி யுபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1000 மாணவ, மாணவியரை சந்தித்து உரையாடுகிறார்.
அப்துல் கலாம் வருகையையொட்டி அவருக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக