ஆத்திச்சூடி
பாட்டின் முதல் தொடரால் இப்பெயர் பெற்றது.
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இடைக்கால ஒளவையார் இயற்றியது.
அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விளக்கேல் - நன்மை செய்ய இளமையிலேயே கற்பிக்கும் நூல்.
ஆசிரியர் - ஒளவையார்
கொன்றை வேந்தன்
பாட்டின் முதல் தொடரால் பெயர் பெற்றது.
91 அடிகள் கொண்டது.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று, இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
மூதுரை
31 வெண்பாக்களைக் கொண்டது, நல்ல பல கருத்துக்களை எளிய முறையில் கூறியுள்ளது.
ஆசிரியர் - ஒளவையார்
நல்வழி
வாழ்க்கைக்கு நல்ல வ்ழியைக் காட்டும் நூல்.
41 பாடல்களைக் கொண்டது.
அருங்கலச்செப்பு
அரிய நகைகளை வைக்கும் பெட்டி
182 குறள் வெண்பாக்களை உடையது.
ஜைன சமய விரதங்களைப் பற்றி கூறும் நூல்
அறநெறிசாரம்
அறத்தின் வழியைப் பிழிந்து தருவது இந்நூல்.
ஆசிரியர் - முனைப்பாடியார் (சமணர்)
பொது அறங்களை மிகுதியாக கூறும் நூல்.
வெற்றிவேற்கை
அரசரின் வெற்றி வேலில் உள்ளது. மக்களின் வாழ்க்கை வெற்றி மனதிலும் செயலிலும் உள்ளது.
ஆசிரியர் - அதிவீர ராம பாண்டியர்
52 அறிவுரைகள் உள்ளன.
காலம் - 16ஆம் நூற்றாண்டு
ஒரு அடியால் ஆன பாடல்களைக் கொண்டது.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். கல்விக்கு அழகு கசடு அற மொழிதல். அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்.
நீதிநெறி விளக்கம்
இந்நூல் இளமை, செல்வம், யாக்கை இவற்றின் நிலையாமையைக் கூறுவது.
ஆசிரியர் - குமரகுருபரர்
காலம் - 17ஆம் நூற்றாண்டு
நன்னெறி
நல்வழி காட்டும் நூல்
ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
40 வெண்பாக்களை உடையது.
மன உறுதி உடையவர்கள் ஐம்புலங்களையும் அடக்குவர். காற்று கல்தூனை சுழற்றாது, துரும்பை சுழற்றும் போன்ற சிறந்த கருத்துக்களைக் கூறும் நூல்.
உலக நீதி
அறிவுரைகள் கூறப்படும் எல்லா பாடல்களும் முருகனை வாழ்த்தி முடிகின்றன.
13 விருத்தப்பாக்களை உடைய நூல்.
ஆசிரியர் - உலக நாத பண்டிதர்
எல்லா அறிவுரைகளும் எதிமறையில் வேண்டாம் என்று குறிக்கப்படுவது சிறப்பு.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
போன்ற பல நல்ல கருத்துக்கள் இந்நூலில் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக