2012-13ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கல்வியியல் படிப்பில் இரட்டை பட்டப்படிப்பு திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் டி. பத்மநாபன் தெரிவித்தார்.
அரக்கோணம் அருகே உள்ள கல்லூரி ஒன்றின பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை வேந்தர் டி. பத்மநாபன், ஆசிரியர் பணி எதிர்கால மன்னர்களை உருவாக்கும் பணியாகும். ஆசியாவிலேயே முதன்முறையாக கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தியாகும்.
தமிழகத்தில் 680 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் மாணவர்கள் இதில் பயில்கின்றனர். தமிகத்தில் மொத்தம் 9 பல்கலைக்கழகங்கள் உள்ள்ன. 2012-12ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் இரட்டை பட்டப்படிப்பு திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இந்த பட்டப்படிப்பில் பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட். ஆகிய இரட்டை பட்டப்படிப்பில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். இது 4 ஆண்டுகள் கொண்ட படிப்பாகும்.
இதனை முடித்தபிறகு முதுகலை பட்டப்படிப்பிலும் சேர்ந்து படிக்கலாம். இந்த இரட்டைப் படிப்பு வருங்கால மாணவர்களுக்கு நன்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் 27ஆம் தேதி பி.எட். தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் படிப்பிற்கு நல்ல மரியாதையும், வரவேற்பும் உள்ளது என்று அவர் கூறினார்.
பாலிடெக்னிக்கில் நேரடியாக 2ம் ஆண்டில் சேர
நேரடியாக இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 ல் தொழில் பிரிவு படித்தவர்கள் அல்லது 10ம் வகுப்பு முடித்து இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள், பாலிடெக்னிக்குகளில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டில் சேர்ந்து படிக்கலாம்.
இந்த சேர்க்கை நடைமுறைகளை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. 2011-12ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இப்போது தொடங்கியுள்ளது.
மே 25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம், விவரங்களை www.tndte.com இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக