இரட்டைப்பட்டம் வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்குள் போதும் -போதும் என்றாகிவிடும்போல. நாளை வருவதாக இருந்த வழக்கு இன்னும் நீடித்து செல்வதாக வழக்கு வட்டாரங்க்ள தெரிவிக்கின்றன. இவ்வழக்கை ஒருங்கிணைக்கும் திரு.ஆரோக்கியராஜ், திரு.கலியமூர்த்தி, திரு.கருணாலயபாண்டியன் ஆகிய மூவர் கூட்டணி தொடர்ந்து மௌனம் காக்கும் சாமியாராகி விட்டார்கள். அவர்களது வழக்குரைஞர் இது குறித்து வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டுள்ளதாக நம்மிடம் தெரிவித்தனர். எனவே இவ்வழக்கு விசாரணை இந்த வாரம் வராது என்பதே இன்றைய நிலை. பதவி உயர்வு பெறத்துடிக்கும் ஆசிரியர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. போராட்ட களத்திற்கே வராமல் எங்கே பலன்க்ள என எமது நிர்வாகிகளைத் துளைத்தெடுக்கும் இயக்க உறுப்பினர்களைப்போல வழக்கிற்கே செல்லாமல் பதவி உயர்வுக்காக காத்திருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் முகநூலில் கருத்து பரிமாறிக்கொள்ளும் அனைத்து தோழர்களுக்காகவும் இதனை பகிர்கிறேன். தொடர்ந்து நம் வலைத்தளத்துடன் (www.mptnptf.blogspot.com ) தொடர்பில் இருக்கவும்.
என்றென்றும் தோழமையுடன்..........
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டத்தலைவர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்.
முகநூல்: https://www.facebook.com/tnptfmuthupandian
E.Mail : tnptfmuthupandian@gmail.com
என்றென்றும் தோழமையுடன்..........
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டத்தலைவர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்.
முகநூல்: https://www.facebook.com/tnptfmuthupandian
E.Mail : tnptfmuthupandian@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக