ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே, நான்கு லட்சம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன. நேற்று அமாவாசை நல்ல நாள் என்பதால், விண்ணப்பங்களை வாங்க, பட்டதாரிகள் முட்டி மோதினர்.இவர்கள் மட்டும்விதிவிலக்கா என்ன?மாநிலம் முழுவதும் உள்ள, 66 மாவட்ட கல்வி அலுவலகங்களில், காலை 9.30 மணியில் இருந்து, விண்ணப்பங்களை வழங்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியிருந்தது. விண்ணப்பங்களைப் பெற, நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும், பட்டதாரிகளும், காலையில் இருந்தே காத்திருந்தனர்.சென்னையில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களிலும், போதுமான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதனால், பெரிய அளவில் கூட்டம் இல்லை. விண்ணப்பங்களை எளிதில் பெற்றுச் சென்றனர்.நபர் ஒருவருக்கு, 10 விண்ணப்பங்கள் வரை வழங்கப்பட்டன. விண்ணப்பங்களை பெற வந்தவர்கள், "அமாவாசை நல்ல நாள் என்பதால், இன்றே வாங்க வந்தோம்' என்றனர்.2 லட்சம் கூடுதல்...சென்னையில் அதிகம் கூட்டம் இல்லாத போதும், தர்மபுரி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.விண்ணப்பம் விற்பனை துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள், மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்ததாகவும்; மாலை 4 மணிக்குள், சென்னை தவிர்த்த இதர மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட, நான்கு லட்சம் விண்ணப்பங்களும், முழுமையாக விற்றுத் தீர்ந்ததாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இதனால், இரண்டாவது கட்டமாக, மூன்று லட்சம் விண்ணப்பங்களை மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி, நேற்றே நடந்தது. மேலும், இரண்டு லட்சம் விண்ணப்பங்களை கூடுதலாக அச்சடிக்கவும், ஆசிரியர் தேர்வு வாரியம், "ஆர்டர்' வழங்கியுள்ளது. இதையடுத்து, மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 10 லட்சமாக உயர்ந்துள்ளது
நன்றி: தினமலர்
நன்றி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக