திருநெல்வேலி : சான்றிதழ் சரி பார்ப்பு பணி முடிவடைந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் பணி நியமன ஆணை வழங்கப்படாததால் ஓவிய ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் 853, தையல் ஆசிரியர்கள் 135, இசை ஆசிரியர்கள் 95, ஓவிய ஆசிரியர்கள் 221 பணியிடங்களை நிரப்ப 24.12.2009 அன்று ஆசிரியர் தேர்வாணையம் மூலம் மாநில சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் ஒரு பணியிடத்திற்கு 5 பேர் வீதம் மொத்ம் 6,275 பேருக்கு சான்றிதழ் சரி பார்ப்புக்கான கடிதம் அனுப்பபட்டு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை முதன்மை கல்வி அலுவலர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் மூலம் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது. இதில் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டவர்களில் உடற்கல்வி ஆசிரியர், இசை ஆசிரியர், தையல் ஆசிரியர் தேர்வு பட்டியல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தொடர்ந்து இவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு காலி பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
ஆனால் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் ஓவிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது பணியிடங்கள் தொடர்பாக சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால் வழக்கு முடிந்தவுடன் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர். ஆனால் வழக்குகள் முடிவடைந்த நிலையில் சுமார் 1 ஆண்டுக்கும் மேலாகிவிட்டதால் அரசிடமிருந்து புதிய அரசாணை பெறப்பட்டு தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக ஆட்சி பதவியேற்ற நிலையில் தேர்வு பட்டியலை எதிர்பார்த்து சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில கவுரவ தலைவர் சுவாமிநாதன் கூறும் போது, ""சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் ஓவிய ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். அனைத்து ஆசிரியர்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்றிய முதல்வர் ஓவிய ஆசிரியர்களின் வாழ்க்கையிலும் விளக்கேற்ற ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக