நாகர்கோவில்: தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான சமச்சீர் பாடப்புத்தங்களில் திருத்தம் செய்ய பச்சை வண்ண ஸ்டிக்கர்கள் பள்ளிகளுக்கு வந்து சேராததால் புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக சமச்சீர் கல்வி இலவச பாட நூல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2 முதல் 5ம் வகுப்பு முடிய மற்றும் 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு முடிய புதிய பாடநூல்களில் திருத்தம், நீக்கப்பட வேண்டிய பகுதிகள் தொடர்பாக விபரங்களும் கல்வித்துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலவச சமச்சீர் கல்வி பாடநூல்களில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு வரும் 15ம் தேதி அன்று மாணவர்களுக்கு புத்தகம் விநியோகம் செய்ய அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, பக்கங்கள் கிழித்தல், ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தல், குறிப்பிட்ட பகுதிகள் கறுப்பு மையால் மறைத்தல் உள்ளிட்ட பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பல மாவட்டங்களில் பாட புத்தங்களில் ஒட்டுவதற்கான பச்சை நிற ஸ்டிக்கர் பள்ளிகளுக்கு வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் ஸ்டிக்கர் வருகைக்காக காத்திருக்கின்றனர். திருத்தங்கள் முழுமையாக மேற்கொள்ளாமல் புத்தகங்களை விநியோகம் செய்யக்கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டிக்கர்கள் வந்தபின் அதனை பெற்று அனைத்து பாட புத்தகங்களிலும் ஒட்டிய பின்னரே அவை மாணவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. 13ம் தேதிக்குள் திருத்த பணிகளை முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இது வரை பணிகள் நிறைவு பெறவில்லை. இதனால் 15ம் தேதி பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக