சிவகங்கை, : திருப்புவனத்தை தனி தாலுகாவாக பிரிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் காளையார்கோவில், சிங்கம்புணரியை தனி தாலுகாவாக பிரிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்தூர் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன. சிவகங்கை தாலுகாவில் சிவகங்கை ஒன்றியம், சிவகங்கை நகராட்சி, காளையார்கோவில் ஒன்றியம் பகுதிகள் உள்ளன. மொத்தம் 9 பிர்க்காக்களும், 130 கிராமங்களும் உள்ளன. அதேபோல் திருப்புத்தூர் தாலுகாவில் திருப்புத்தூர் ஒன்றியம், திருப்புத்தூர் பேரூராட்சி, சிங்கம்புணரி ஒன்றியம், எஸ்.புதூர் ஒன்றியம் பகுதிகள் உள்ளன. மொத்தம் 8 பிர்க்காக்களும் 100 கிராமங்களும் உள்ளன.
மேலும் உதவியாளர், தட்டச்சர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் சுமார் 40ம், திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்தில் சுமார் 30ம் காலியாக உள்ளன. இதுதவிர ஒரு சில இடங்களில் ஒரு வி.ஏ.ஓ. 2க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை கவனித்து வருகின்றனர். இதனால் பள்ளி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள், பட்டா மாறுதல், ரேசன்கார்டு, முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவித்தொகை போன்றவற்றை குறித்த நேரத்தில் வழங்க முடியாமல் வருவாய்த்துறை ஊழியர்கள் திணறி வருகின்றனர். மாணவர்களும், பொதுமக்களும் சான்றிதழ்களை பெற முடியாமல் தினமும் அலைய நேரிடுகிறது.
சிவகங்கை, திருப்புத்தூர் தாலுகா பரப்பளவில் விரிந்துள்ளதால் பொதுமக்கள் நெடுந்தூரத்திலிருந்து அலைய வேண்டிய நிலை இருந்து வருகிறது. கடந்த 15 வருடங்களாக சிவகங்கையிலிருந்து காளையார்கோவிலையும், திருப்புத்தூரிலிருந்து சிங்கம்புணரியையும் பிரித்து தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் 6 பிர்க்காக்களை கொண்ட மானாமதுரை தாலுகாவிலிருந்து திருப்புவனத்தை தனி தாலுகாவாக பிரிக்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள காளையார்கோவில், சிங்கம்புணரி தனி தாலுகா திட்டம் தொடர்பான கருத்துரு அப்படியே கிடப்பில் உள்ளன. எனவே காளையார்கோவில் மற்றும் சிங்கம்புணரியையும் தனி தாலுகாவாக பிரிக்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை ஊழியர் ஒருவர் கூறும்போது, 1397967985 மானாமதுரை எம்.எல்.ஏ. முயற்சியால் திருப்புவனம் தனி தாலுகாவாக பிரிக்க பிரப்போசல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள காளையார்கோவில், சிங்கம்புணரி தனி தாலுகா திட்டம் மக்கள் பிரதிநிதிகள் முயற்சி இல்லாததால் அப்படியே கிடப்பில் உள்ளன. எனவே தமிழகத்திலே பெரிய தாலுகாக்களாக உள்ள சிவகங்கை, திருப்புத்தூரை 2 ஆக பிரிக்க மக்கள் பிரதிநிதிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக