நெல்லை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி காரணமாக பாடப்புத்தகங்கள் இல்லாமல் நகன்ற நாட்களை ஈடுகட்ட பள்ளிகளில் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் 2 சனிக்கிழமை வேலை நாள் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிமுக அரசு சமச்சீர் கல்விக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து கல்வியாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். இறுதியில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூன் 15-ம் தேதி தான் திறக்கப்பட்டன.
இதே போன்று சமச்சீர் கல்வி புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போதுதான் சென்றடைந்துள்ளது. பல தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு இன்னும் புத்தகங்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பள்ளி வேலை நாட்களை ஈடுகட்ட கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த பின்னர் ஒரு கல்வி ஆண்டில் 183 நாட்களுககு பள்ளிகளில் பாடம் நடத்தப்பட வேண்டும்.
சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு பின்னர் 123 நாட்கள்தான் பள்ளிகளை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, எஞ்சியுள்ள 60 நாட்களை ஈடுகட்ட இந்த மாதம் முதல் வரும் ஏப்ரல் வரை மாதத்தில் ஏதாவது இரண்டு சனிக்கிழமை பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக