சென்னை :"கல்வி சம்பந்தப்பட்ட வழக்குகளில், அவசரகதியில் இடைக்கால உத்தரவுகளை கோர்ட்டுகள் பிறப்பிக்கக் கூடாது' என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
தர்மபுரியில் உள்ள சப்தகிரி பி.ஜி., தொழில் பயிற்சி மையத்தில் சேர்ந்த 17 மாணவர்களை, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த கல்வி நிறுவனத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என, புகார் கூறப்பட்டது. பின், மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தனி நீதிபதி உத்தரவிட்டார். 2008 ம் ஆண்டு, ஜூலை மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொழில் மற்றும் பயிற்சித் துறை கமிஷனர், கோவையில் உள்ள மண்டல இணை இயக்குனர், அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:கல்வி நிறுவனங்களை அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அங்கே சரிவர தரம் பேணப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அனைத்து மட்டங்களிலும், நேரங்களிலும் கல்வித் தரம் சரிவர பேணப்படுகிறதா என்பதை கவனிக்க, மத்திய, மாநில அரசுகள் அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் என நம்புகிறோம்.சட்டவிரோதமாக, மெத்தனமாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர்களை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கோர்ட்டுகளுக்கு கல்வி நிறுவனங்கள் விரைகிறது. இதுபோன்ற நேரங்களில் கோர்ட்டுகளும் அவசரகதியில் இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது.
இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக