சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங், 19 மற்றும் 20ம் தேதிகளிலும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிகளில், எந்த எந்த வகையிலான ஆசிரியர்களுக்கு, எந்த நேரத்தில் கவுன்சிலிங் நடத்துவது குறித்து, துறை அதிகாரிகள் அட்டவணை வகுத்து வருகின்றனர். இதற்கான அட்டவணை, இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம் எனத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக