தமிழகத்தில் கூடுதலாக மேலும் சில பள்ளிகளை தரம் உயர்த்தவும், அடிப்படை வசதிகள் செய்யவும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசு விரைவில் ஆணை வெளியிட உள்ளது.
அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கில், தமிழகத்தில் 1,500க்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த கடந்த அரசு முயற்சிகள் மேற்கொண்டது. அதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தில் 1,200 பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.2,100 கோடி மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டது.
இதன்பேரில் 344 பள்ளிகளை தரம் உயர்த்தப்பட்டன. இதைத்தொடர்ந்து 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப் போவதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். இதற்காக ரூ.419 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிதியின் மூலம், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து சம்பளம் வழங்குவது, அடிப்படை வசதிகள் செய்வது, மாதிரி பள்ளிகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான தமிழக அரசின் உத்தரவு இரண்டு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Dinakaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக