நாகை மாவட்டத்தில் கல்வி அலுவலகத்தில் அரசுப்பணம் ரூ. 33 லட்சத்தினை கையாடல் செய்த வழக்கில் உதவி கல்வி அலுவலர்கள் 3 பேருக்கு 1 வருடம் சிறைத்தண்டனையும், ரூ. 57,500 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதியன்று நாகை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் உயர்அதிகாரியாக பணியாற்றிய சம்பத் என்பவர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கூறினார்.
அதில் உதவி கல்வி அலுவலர்கள் சதாசிவம், தனசாமி, மனோகரன் உள்ளிட்டோர், கல்விஅலுவலகத்தின் சேமநல நிதி ரூ. 33 லட்சத்து 27 ஆயிரத்து 738 ஐ கையாடல் செய்ததாக கூறினார். இது தொடர்பான வழக்கு நாகை மாவட்ட ஜே.எம்.1 கோர்டில் வழக்கு நடந்து வந்தது. இதன் விசாரணை இன்று நீதிபதி கோதண்டராஜ் முன்னிலையில வந்தது. இதில் குற்றவாளிகள் சதாசிவம், தனசாமி, மனோகரன் ஆகியோருக்கு 1 வருடம் சிறை தண்டனையும், ரூ. 57,500 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக