சென்னை:"வங்கி, எழுத்தர் பணிக்கான, எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் பி.சி., பிரிவினருக்கு, இலவசப் பயிற்சியளிக்கப்பட உள்ளது' என, யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர் நல சங்க பொதுச் செயலர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்தியன் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐ.ஓ.பி., உள்ளிட்ட, 19 பொதுத் துறை வங்கிகளில், 30 ஆயிரம், எழுத்தர் பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வு, அடுத்த மாதம் 20ம் தேதி நடக்கிறது. மாநில அளவில் நடைபெறும் இத்தேர்வில் பங்கேற்கும், பி.சி., பிரிவினருக்கு, சென்னை மற்றும் மதுரையில், மூன்று நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரியில், நவம்பர் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலும், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலும், காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை, இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.இந்த இலவச பயிற்சியை பெற விரும்புவோர், வங்கி தேர்வுக்கான விண்ணப்பம், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலை, யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர் நல சங்கம், 139, பிராட்வே, தமிழ்நாடு, 600 108 என்ற முகவரிக்கு வரும் 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களை, 94449 93844, 93810 07998 ஆகிய எண்களில் பெறலாம்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக