நெல்லை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நிலவரத்தை 2 மணிநேரத்தி்ற்கு ஒருமுறை 7 அறிக்கைகளாக அனுப்புமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, அனைத்து மாவட்டங்களிலும், ஊரகம், டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி வாரியாக 2 மணி நேரத்திற்கு 1 முறை பதிவான வாக்கு விபரங்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உடனுக்குடன் ஆய்வு செய்து தொகுப்பு அறிக்கை தயார் செய்ய உள்ளது. எனவே 2 மணிநேரத்திற்கு ஒருமுறை வாக்கு பதிவு நிலவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
வாக்கு பதிவு துவக்கப்பட்டது என்ற விபரத்தை காலை 7 -7.15 மணிக்குள் முதல் அறிக்கையாகவும், 9 மணி, 11 மணி, 1 மணி, 3 மணி, 5 மணி நிலவரங்களை 5 தனித்தனி அறிக்கைகளாக ஒவ்வொரு 2 மணிநேரம் முடிந்த 30 நிமிடங்களுக்கு உள்ளும் மாலை 6 மணிக்கு இறுதி அறிக்கையாக பதிவான வாக்குளின் விபரத்தையும் அனுப்ப வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக