அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில், 698 அரசுப் பள்ளிகளில், ஆய்வக வசதி ஏற்படுத்த, 49.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்த மெட்ரிக், ஓரியண்டல், ஸ்டேட் போர்டு உள்ளிட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைந்து, நடப்பு கல்வியாண்டில், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, ஸ்டேட் போர்டு பாடத் திட்டத்தைப் பின்பற்றி வந்ததால், அதில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே, அறிவியல் செய்முறைகள் இருந்தன. ஆனால், மெட்ரிக் பள்ளிகளில், 10ம் வகுப்பிலேயே செய்முறைத் தேர்வு இருந்தது.
தற்போது, சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தியுள்ளதால், அரசுப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும், செய்முறைக்குத் தயாராக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே, அறிவியல் ஆய்வகங்கள் இருந்த நிலையில், தற்போது, உயர்நிலைப் பள்ளிகளில், ஆய்வகங்கள் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் சார்பில், இரு ஆண்டுகளாக, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்கள், அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, முதல் கட்டமாக கட்டட வசதி உள்ளிட்ட முழு ஆய்வகம் அமைப்பதற்காக, 698 பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில், கட்டட வசதிக்கு, தலா 6.10 லட்ச ரூபாயும், உபகரணங்கள் வாங்குவதற்கு, ஒரு லட்ச ரூபாயும் என, 7.10 லட்ச ரூபாய் வீதம், மொத்தம், 49.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக