வேலூர்: ஆம்பூர் பாங்கி ஹயாத் பாஷா சாஹெப் பள்ளிக்கு, தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தொடக்க கல்வித் துறை, ஆண்டு தோறும் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. 2009-10ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளி விருது ஆம்பூர் பாங்கி ஹையாத் பாஷா சாஹெப் பள்ளிக்கு கிடைத்துள்ளது.
இந்த பள்ளிக்கு விருது வழங்கும் விழா ஆம்பூரில் நடந்தது. வேலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மல்லிகா, பள்ளி மேலாளர் பாங்கி பர்வேஜ் அக்பரிடம் விருது வழங்கினார்.
மாதனூர் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருப்பதி, பள்ளி டிரஸ்டி டாக்டர் அயாஜ் அக்பர், தலைமை ஆசிரியர் பகலுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புகழ் பெற்ற தன்னார்வலர்கள் இயக்கம் சார்பில், சிறந்த பள்ளி விருது 2009ம் ஆண்டு இப்பள்ளிக்கு கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக