தமிழகத்தில் மாநில அளவிலான பதிவு மூப்பின்படி இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களில் பெறப்பட்ட பட்டியலின்படி, இட ஒதுக்கீடு மற்றும் பாலின அடிப்படையில் "கட்-ஆப்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "கட்-ஆப்' தேதிக்குள் இடம் பெற்றவர்கள் மட்டுமே, இந்த முறை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தேர்வு பெறும் தகுதியை பெறுகின்றனர். அதன் விவரம்: எஸ்.சி.,(பொது மற்றும் மகளிர்): 12.3.2007 வரை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(பொது மற்றும் மகளிர்): 11.10.2004 வரை. பிற்படுத்தப்பட்டோர் (ஆண்கள்): 13.11.2002 வரை. பிற்படுத்தப்பட்டோர்(மகளிர்): 9.10.2000 வரை. முஸ்லிம்(பொது): 27.2.2006 வரை. முஸ்லிம்(மகளிர்): 11.10.2009 வரை. எஸ்.சி.ஏ.(பொது மற்றும் மகளிர்): 24.3.2008 வரை. பழங்குடியினர்(பொது): 27.2.2006 வரை. பழங்குடியினர்(மகளிர்): 12.3.2007 வரை. மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இட ஒதுக்கீடு சதவீத்தின் அடிப்படையில் தனியாக "கட்-ஆப்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 2010 வரை பதிவு செய்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தீர்ப்பாணையின்படி, மாநில பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் 1:5 எனும் விகிதாச்சாரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரிடமிருந்து இதற்கான பட்டியல் பெறப்பட்டுள்ளது. எனவே, இடைநிலை ஆசிரியர் நியமனம், வேலை வாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.
Dinamalar
Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக