தேனி : தமிழக அரசு சார்பில் சிறந்த உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு, பட்டயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு, இந்திய விளையாட்டு ஆணைய பயிற்றுனர்கள், பிற பயிற்றுனர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் ஐந்தாண்டு தமிழகத்தில் தொடர்ந்து வாழ்ந்து வீரர், வீராங்கனைகளை உருவாக்கி இருத்தல் வேண்டும்.
சர்வதேச, தேசிய அளவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் (01-04-2008 முதல் 31-03-2011) வீரர், வீராங்கனைகளை உருவாக்கிய பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும், பயிற்றுனர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் மூலமும் பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும்.
பிற பயிற்றுனர்கள் நேரடியாக உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னைக்கு அனுப்ப வேண்டும். இணைய தளம் (தீதீதீ.ண்ஞீச்t.டிண) மூலம் விண்ணப்பம், விதிமுறைகளை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தின் உரைமேல் "முதல்வர் விருதுக்கான விண்ணப்பம்" என எழுதி அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வெ.ரா., பெரியார் நெடுஞ்சாலை, நேருபூங்கா, சென்னை - 600 084 என்ற முகவரிக்கு டிச.,31க்குள் அனுப்ப வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக