சிவகங்கை, டிச. 18: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் நீலமேகம் முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர் ஜோசப்ரோஸ் தீர்மானங்களை வாசித்தார். மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும். 2009-10 கல்வி ஆண்டில் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் போன்ற ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப் படியை வரையறுக்கப்பட்ட பட்டியலில் உடன் சேர்க்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை யே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் புரட்சித்தம்பி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக