சென்னை: சென்னையில் இருசக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் இயக்கி வருவது
அதிகமாவதாக புகார் எழுந்துள்ளது. பெற்றோரும் இதற்கு உறுதுணையாக இருப்பது
அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் இரு சக்கர
வாகனங்களில்தான் சென்று வருகின்றனர். தற்போது அதிவேகமாக செல்லக்கூடிய
வகையில் 150 சிசி, 200 சிசி உள்பட பல்வேறு கம்பெனிகளின் ஏராளமான வாகனங்கள்
விற்பனைக்கு வருகின்றன. குறிப்பாக இந்த தனியார் நிறுவனங்கள் இது போன்ற இரு
சக்கர வாகனங்களை மாணவர்களை குறிவைத்தே சந்தைப்படுத்துகின்றனர் என்பது
அதிர்ச்சித் தரக்கூடிய தகவலாக உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகமாவதோடு, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாதாரணமாக 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை, கூட்ட நெரிசலுக்கு இடையே சுமார் ஒரு மணி நேரம் வரை பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதுபோன்ற நிலையில், பள்ளி மாணவர்களும் இரு சக்கர வாகனங்களில் ஆபத்தை உணராமல் பள்ளிக்கு சென்று வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது என்று புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தும் மாணவர்களுக்கு எதிராக இந்த ஆண்டில் ஏராளமான வழக்குகளை பதிவு செய்துள்ளோம். அந்த மாணவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட வாகனம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து வருகிறோம்.
மேலும் பள்ளி நிர்வாகத்திடமும், பள்ளி வளாகத்தினுள் மாணவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறோம். தற்போது வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் 50 சிசிக்கும் குறைவான பைக்குகள் தயாரிப்பை நிறுத்திவிட்டது. ஆனால் அதி வேகமாக செல்லக்கூடிய வாகனங்களை பெற்றோரே மாணவர்களுக்கு வாங்கி தருவது வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது. இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதில் முதலில் விழிப்புணர்வு பெற்றோருக்கு வர வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக