சென்னை:ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும், 779 பள்ளிகளில், கழிவறை வசதியை ஏற்படுத்த, 38 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ், 1,369 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், கழிவறை வசதிகள் இல்லாத, 779 பள்ளிகளில், கழிவறை வசதிகளை உடனே ஏற்படுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட, 30 மாவட்டங்களில் உள்ள, 779 ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் கழிவறை கூடங்கள் கட்ட, பள்ளி ஒன்றுக்கு, ஐந்து லட்ச ரூபாய் வீதம், 38.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக