பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/08/2012

பள்ளி நேரம் மாற்றத்தால் சிறுவர், சிறுமியர்...தவிப்பு!மதிய உணவு நேரத்தைக் குறைக்க யோசனை

அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள, புதிய பள்ளி நேரம், குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. பஸ் கிடைக்காத கிராமப்புற மாணவர்களும், வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பகுதி மாணவர்களும், இதனால் தவிப்புக்குள்ளாகின்றனர்.
இதைத் தவிர்க்க, "மதிய உணவு இடைவேளையில் வகுப்பு நடத்தி, சமச்சீர் இடைவேளை நாட்களை ஈடு செய்யலாம்' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யோ சனை தெரிவித்துள்ளது.சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த ஏற்பட்ட, தாமத நாட்களை ஈடு செய்ய, தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகள், மாலை 4.40 மணி வரை செயல்பட வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி முடிந்து குழந்தைகள், வீடு வந்து சேர தாமதமாவதால், இந்த உத்தரவுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பலர், இதனால் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.பகல் 12.40 மணிக்கு, மதிய உணவு சாப்பிடும் குழந்தைகள், மாலை 4.00 மணியானால், பசியில் சோர்ந்து விடுகின்றனர்.
அதைத் தாண்டி, 40 நிமிடம் கூடுதலாக பள்ளியில் அமரும்போது, சொல்லிக் கொடுக்கும் பாடம், மனதில் பதியுமா என்ற கேள்வியும், அவர்கள், பாதுகாப்பாக வீடு சென்று
சேர்வரா என்ற கேள்வியும் எழுகின்றன.கோவையில் தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, காரமடை உள்ளிட்ட பல பகுதிகளில், மலையடிவாரங்களில் இருந்து, ஏராளமான குழந்தைகள், பள்ளிக்கு வருகின்றனர்.
இதே போல தமிழகத்தின் பிற கிராமப்புற, மலைப் பகுதி மாணவர்களும், இப்பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.

மலை சார்ந்த பகுதிகளுக்கு, போக்குவரத்து வசதி சற்று நேர தாமதமானால், சூரிய வெளிச்சம் குறைந்து, மாலை 6.00 மணிக்கு மேல், வீடு திரும்பும் நிலை உள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின், கோவை மாவட்ட தலைவர் சுப்பையா, செயலர் கணேசன் கூறியதாவது:பல கிராமங்களுக்கு, ஒரு நாளில் ஓரிரு பஸ்களே உள்ளன. அந்த பஸ்சை விட்டால், வேறு மார்க்கமே இருப்பதில்லை. சிறுவர், சிறுமியர் தவிப்பதோடு, வெளியூரில் இருந்து வரும் ஆசிரியர்களும் சிரமப்படுகின்றனர்.

தாமதமாக பள்ளிகள் துவங்க அரசே காரணம் என்பதால், விட்டுப் போன நாட்களை ஈடு செய்ய வேண்டுமானால், அந்த நாட்களுக்கு"தவிர்ப்பு ஆணை'யை அரசு வழங்கலாம். தற்போது, 12.40 முதல் 2.00 மணி வரை மதிய உணவு வேளையாக உள் ளது. இதற்கு பதிலாக அந்த நேரத்தைக் குறைத்து, 1.30 மணிக்கே, மீண்டும் வகுப்பை துவக்கி விடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Thanks: Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக