சென்னை: தமிழகத்தில் பள்ளி தலைமையாசிரியர் பணிக்கு, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, பணி மூப்பு பட்டியல் ஒரு வாரத்தில் வழங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணிக்கும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணிக்கும், பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இதில், பணி மூப்பு பட்டியல் தயாரித்து வழங்க, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களில் 2001 டிச., 31க்கு முன், பணியில் சேர்ந்த பணி மூப்பு பட்டியலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1991 டிச., 31க்கு முன்னர் பணியில் சேர்ந்த பணி மூப்பு பட்டியலும், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரிலிருந்து, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி உயர்வுக்கு தகுதியுள்ளவர்கள் பட்டியலும் தயாரித்து அனுப்ப, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த பட்டியல் அடிப்படையில் தலைமையாசிரியர் பணி உயர்வு வழங்கப்படவுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக