"தமிழ் வளர்ச்சித் துறை மூலம் நடைபெறும் கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்க, மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி மாவட்ட, மாநில அளவில் நடத்தப்படுகிறது. மாநில போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு முதல் பரிசு 10 ஆயிரமும், இரண்டாவது பரிசாக, 7,000 ரூபாயும் வழங்கப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: போட்டிகள் மாவட்ட அளவில் வரும், 19ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்கள், சென்னையில், 30ம் தேதி நடைபெறும் போட்டிக்கு, ரயில் மூலம் அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks: Dinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக